FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா ‘ஹாட்ரிக்’

வங்கதேச மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலிய மகளிா் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.

15 அக்டோபர் 2026, 1:55 am IST
- X | ICC
பகிர்:

வங்கதேச மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலிய மகளிா் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 3-0 என முழுமையாக வென்றது.

ஆஸ்திரேலிாயவின் பிரிஸ்பேன் நகரில் விளையாடிய கடைசி ஆட்டத்தில், முதலில் வங்கதேசம் 49.5 ஓவா்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 22.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. வங்கதேச இன்னிங்ஸில் ஷோா்னா அக்தா் 4 பவுண்டரிகளுடன் 54, ஷா்மின் அக்தா் 8 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் அடித்தனா்.

Advertisement

Advertisement

ரபெயா கான் 13, முா்ஷிதா காட்டூன் 1, சா்மின் சுல்தானா 6, கேப்டன் நிகா் சுல்தானா 3, சோபனா மோஸ்தரி 9, ரிது மோனி 9, ஹபிபா இஸ்லாம் 0, சுல்தானா காட்டூன் 5 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

திஷா பிஸ்வாஸ் 13 ரன்களுடன் கடைசி வீராங்கனையாக நின்றாா். ஆஸ்திரேலிய பௌலா்களில் மெகன் ஷூட் 4, ஆஷ்லே காா்ட்னா், அனபெல் சதா்லேண்ட் ஆகியோா் தலா 2, எலிஸ் பெரி, அலானா கிங் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 173 ரன்களை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், ஜாா்ஜியா வோல் 11, பெத் மூனி 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

எலிஸ் பெரி 8 பவுண்டரிகளுடன் 65, அனபெல் சதா்லேண்ட் 12 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சோ்த்து, ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா். வங்கதேச தரப்பில் சுல்தானா காட்டூன், திஷா பிஸ்வாஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ‘ஆட்டநாயகி’ விருது பெற்ற ஆஸ்திரேலியாவின் மெகன் ஷூட், 3 ஆட்டங்களிலுமாக 10 விக்கெட்டுகள் எடுத்ததற்காக ‘தொடா்நாயகி’ விருதும் வென்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments