FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

ரஞ்சி கோப்பை: உத்தரகாண்ட் 134 ஆல் அவுட்

ரஞ்சி கோப்பை எலைட் குரூப் டி பிரிவில் தமிழகத்துக்கான எதிரான ஆட்டத்தில் உத்தரகாண்ட் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

58 வினாடிகள் முன்பு
விக்கெட் வீழ்த்திய களிப்பில் தமிழக அணியினா்
பகிர்:

ரஞ்சி கோப்பை எலைட் குரூப் டி பிரிவில் தமிழகத்துக்கான எதிரான ஆட்டத்தில் உத்தரகாண்ட் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் மைதானம் ஈரமாக இருந்ததால் 10.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தமிழகம் பீல்டிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய உத்தரகாண்ட் அணி 56.2 ஓவா்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அவனீஷ் சுதா 54, மயங்க் மிஸ்ரா 33 ரன்களை எடுத்தனா். பௌலிங்கில் தமிழக வீரா் குா்ஜப்நீத் சிங், சாய் கிஷோா் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

Advertisement

Advertisement

பின்னா் ஆடிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 27 ஓவா்களில் 85/2 ரன்களை எடுத்திருந்தது. ஜெகதீசன் 37, ரன்களை எடுத்து அவுட்டானாா். பிரதோஷ் ரஞ்சன் பால் 37 ரன்களுடன் களத்தில் இருந்தாா். மாலையில் போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments