FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரொனால்டோவை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்த போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு

கால்பந்து வீரர் ரொனால்டோ 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து...

20 அக்டோபர் 2026, 5:00 am IST
கிறிஸ்டியானோ ரொனால்டோ - படம்: எக்ஸ் / ரொனால்டோ.
பகிர்:

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாள் போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு 30 நாள் தடை விதித்தது.

2026 - 27 ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் நடத்தும் நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தொடரில் போர்ச்சுகல் அணி விளையாடியபோதிலும், போட்டிகளில் முன்னணி நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மேலும், நார்வே அணிக்கு எதிராக போட்டியில் போர்ச்சுகல் அணியில் சேர்க்கப்பட்டிருந்தால், ரொனால்டோவை மாற்று வீரர்கள் வரிசையிலேயே அமர வைக்கப்பட்டதாக போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டென்மார்க் அணிக்கு எதிரான போட்டியிலும் ரொனால்டோ விளையாட மாட்டார் என ஜீசஸ் அறிவித்தார்.

Advertisement

Advertisement

இதனையடுத்து, விளையாட வாய்ப்பு தருவதாகக் கூறிவிட்டு, வாக்குறுதியை மீறிவிட்டதாக பயிற்சியாளர் ஜீசஸ் மீது அதிருப்தியடைந்த ரொனால்டோ, டென்மார்க் போட்டிக்கு முன்பாகவே பயிற்சி முகாமில் இருந்து வெளியேறினார்.

இருப்பினும், ரொனால்டோவுக்கு தான் எந்தவொரு வாக்குறுதியும் அளிக்கவில்லை என ஜீசஸ் மறுப்பு தெரிவித்தார்.

இதனிடையே, போட்டிக்கு முன்பாகவே பயிற்சி முகாமைவிட்டு வெளியேறியதாக ரொனால்டோவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த நிலையில், ரொனால்டோவுக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டதாகக் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அவரை 30 நாள்களுக்கு இடைநீக்கமும், 255 யூரோக்கள் அபராதமும் விதித்தது.

summary

Ronaldo given 30-day suspension and £215 fine by Portuguese FA

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments