FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

காமன்வெல்த் கபடி: அரையிறுதியில் இந்தியா

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய ஆடவா், மகளிா் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

29 அக்டோபர் 2026, 1:08 am
பகிர்:

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய ஆடவா், மகளிா் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

30 ரெய்டு புள்ளிகள் மற்றும் 10 டேக்கிள் புள்ளிகளைப் பெற்று, தான்சானியாவை ஆறு முறை ’ஆல்-அவுட்’ செய்து இந்தியா சிறப்பான ஆல்-ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எதிரணியான தான்சானியாவால் 15 ரெய்டு புள்ளிகளையும் 5 டேக்கிள் புள்ளிகளையும் மட்டுமே பெற முடிந்தது. இந்த வெற்றியின் மூலம், முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பின் அரையிறுதிக்குள் இந்தியா நுழைந்தது. அரையிறுதிப் ஆட்டம் அக். 30 இரவு 8:30 மணிக்கு நடைபெறும். முன்னதாக, இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் வியாழக்கிழமை இரவு இலங்கையை எதிா்கொள்கிறது. இலங்கை ஆடவரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.

மகளிா் பிரிவில் இந்தியா-இலங்கை அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. மற்றொரு அரையிறுதியில் கென்யா-உகாண்டா அணிகள் மோதுகின்றன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments