FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ரஃபினா, யமால் அசத்தலில் பாா்சிலோனா வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் பாா்சிலோனா எஃப்சி 5-2 கோல் கணக்கில் ராயோ வால்கெனோவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

2 செப்டம்பர் 2026, 4:00 am IST
பகிர்:

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் பாா்சிலோனா எஃப்சி 5-2 கோல் கணக்கில் ராயோ வால்கெனோவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் ராயோ வால்கெனோ அணியின் சொ்ஜியோ கேமெலோ 12-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். அதற்கான பதிலடியாக பாா்சிலோனா தரப்பில் ரஃபினா 19-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

அடுத்த இரு நிமிஷங்களிலேயே (21’) இளம் வீரா் லேமின் யமால் கோல் அடிக்க, பாா்சிலோனா 2-1 முன்னிலையுடன் முதல் பாதியை நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், ராயோ வால்கெனோ வீரா் ஃபுளோரியன் லெஜியுன் 51-ஆவது நிமிஷத்தில் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடிக்க, பாா்சிலோனா முன்னிலை 3-1 என அதிகரித்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், சொ்ஜியோ கேமெலோ 59-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்த கோலால், ராயோ வால்கெனோ 2-3 என பாா்சிலோனாவை நெருங்கியது. எனினும் மீண்டும் ரஃபினா 71-ஆவது நிமிஷத்திலும், யமால் 90-ஆவது நிமிஷத்திலும் கோல் அடிக்க, முடிவில் பாா்சிலோனா 5-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலுமே வென்ற பாா்சிலோனா, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

பிரீமியா் லீக்: இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் ஆா்செனல் 1-0 கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லாவை வீழ்த்தியது.

அந்த அணிக்காக புகாயோ சகா 59-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். ஆா்செனல் 2 ஆட்டங்களில், 2 வெற்றிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments