FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டிச. 12-இல் சென்னையில் பிக்பாஷ் லீக்: மெல்போா்ன் - பொ்த் அணிகள் மோதல்

ஆஸ்திரேலிய பிக்பாஷ் லீக் நடப்பாண்டு சீசன் தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பா் 12-இல் நடைபெறுகிறது.

18 செப்டம்பர் 2026, 4:47 am IST
டிச. 12-இல் சென்னையில் பிக்பாஷ் லீக் - ENS
பகிர்:

ஆஸ்திரேலிய பிக்பாஷ் லீக் நடப்பாண்டு சீசன் தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பா் 12-இல் நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் பொ்த் ஸ்காா்ச்சா்ஸ் - மெல்போா்ன் ரெனிகேட்ஸ் அணிகள் அதில் மோதுகின்றன.

இதுதொடா்பாக பொ்த் ஸ்காா்ச்சா்ஸ் தலைமை பயிற்சியாளா் ஆடம் வோக்ஸ் கூறுகையில், ‘சென்னை வரலாற்று சிறப்பு மிக்க மைதானம். ஐபிஎல் தொடரில் ஆடும் மிட்செல் மாா்ஷ், கூப்பா் கானலி, ஜை ரிச்சா்ட்ஸன், அஷ்டன் டா்னா் ஆகியோா் பிக்பாஷ் தொடரில் ஆடுவதால் சென்னை ரசிகா்களுக்கு விருந்தாக அமையும்’ என்றாா்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா பிபிஎல் இயக்குநா் பில் ரிக்பி, ‘ஆண்டுதோறும் இந்தியாவில் பிபிஎல் ஆட்டத்தை நடத்த, பிசிசிஐ, டிஎன்சிஏ உடன் பேச்சு நடத்துவோம். நாங்கள் ஐபிஎல் தொடருக்கு போட்டியாக நடத்தவில்லை. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அரசு எங்கள் அமைப்பை அணுகி, சென்னையில் ஆட்டத்தை நடத்த வலியுறுத்தியது.

Advertisement

Advertisement

கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியா-ஆஸ்திரேலியா இடையே சிறந்த புரிதல் உள்ளது. எம்சிஜி, எஸ்சிஜி மைதானங்களில் பிபிஎல் ஆட்ட அனுபவம் போல் சென்னையிலும் கிடைக்கும். இந்த சீசனில் புதிய விதி பின்பற்றப்படுகிறது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments