30+ கோல்கள் பங்களிப்பு: சிவனும் சக்தியுமாக அசத்தும் ரபீனியா - லமின் யமால்!
பார்சிலோனாவில் அசத்தும் ரபீனியா - லமின் யமால் குறித்து...
பார்சிலோனா கால்பந்து அணியில் ரபீனியா - லமின் யமால் இணைந்து சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்த 2026/27 சீசனில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா தொடரில் நடப்பு சாம்பியனாக இருக்கும் பார்சிலோனா அணி இந்த சீசனில் ஏழு போட்டிகளிலும் தோல்வியுறாமல் அனைத்திலும் வெற்றியைப் பெற்றுள்ளன.
பார்சிலோனா 7 போட்டிகளில் 21 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கின்றது. சாம்பியன்ஸ் லீக்கிலும் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
பார்சிலோனாவின் ஃபார்வர்டு வீரர்களாக இருக்கும் ரபீனியா, லமின் யமால் இணைந்து 31 கோல்கள் பங்களிப்பு செய்துள்ளார்கள். இன்றைய செவில்லா போட்டியில் ரபீனியா ஹாட்ரிக் கோல் அடிக்க, யமால் 2 அசிஸ்ட் செய்தார்.
ரபீனியா 14 கோல்கள் 3 அசிஸ்ட்டுகளும், லமின் யமால் 8 கோல்கள் 6 அசிஸ்ட்டுகளும் செய்துள்ளார்கள். இருவரும் இணைந்து கைகள் கோர்த்து தங்களுக்கென புதிய வகையான கொண்டாட்ட முறையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
உலகக் கோப்பையில் அசத்திய ரோட்ரி பார்சிலோனா அணியில் இணைந்தது அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. லா லிகா தொடரில் மட்டுமே இந்த அணி 31 கோல்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பார்சிலோனா இந்த முறையும் லா லிகா கோப்பையையும் சாம்பியன்ஸ் லீக்கையும் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடி வருகிறது.
Over 30 goal contributions: Raphinha and Lamine Yamal shining like Shiva and Shakti!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.