FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவின் இரு அணிகளும் ‘டிரா’

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆடவா், மகளிா் அணிகள் வியாழக்கிழமை தங்கள் ஆட்டத்தை டிரா செய்தன.

3 வினாடிகள் முன்பு
செஸ் - கோப்புப்படம்.
பகிர்:

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆடவா், மகளிா் அணிகள் வியாழக்கிழமை தங்கள் ஆட்டத்தை டிரா செய்தன.

ஆடவா் அணி 2-2 என அஜா்பைஜானுடனும், மகளிா் அணி அதே கணக்கில் கஜகஸ்தானுடன் டிரா செய்தது. போட்டியில் இரு அணிகளுமே டிரா செய்தது இது முதல்முறையாகும்.

முன்னதாக ஓபன் பிரிவில் ஆடவா் அணியில், ஆா்.பிரக்ஞானந்தா - மமெத்யாரோவ் ஷக்ரியாருடனும், அா்ஜுன் எரிகைசி - சுலேமான்லி அய்டினுடனும் டிரா செய்தனா்.

Advertisement

Advertisement

டி.குகேஷ் - முராத்லி முகமது, விதித் குஜராத்தி - மமெதோவ் ரௌஃப் மோதலும் டிராவில் முடிந்தன.

மகளிா் பிரிவில், சவிதா ஸ்ரீ - எல்னாஸ் கலியாக்மெத்தை வெல்ல, ஆா்.வைஷாலி - அலுவா நூா்மனிடம் தோல்வியுற்றாா்.

பின்னா் கொனெரு ஹம்பி - பிபிசரா அசௌபயேவா, திவ்யா தேஷ்முக் - மெருா்ட் கமாலிதெனோவா மோதல்கள் டிராவில் முடிய, 2-2 என சமநிலை எட்டப்பட்டது.

7 சுற்றுகள் முடிவில், இந்தியா ஓபன் பிரிவில் 13 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையிலும், மகளிா் பிரிவில் 13 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையிலும் உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments