டி20 உலகக் கோப்பை

அரையிறுதி வெற்றியைக் கொண்டாடாதது ஏன்?: ஜிம்மி நீஷம் அசத்தல் பதில்

DIN

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடாத காரணம் குறித்து நியூசி. வீரர் ஜிம்மி நீஷம் பதில் அளித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி.

அபுதாபியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார். பிறகு பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. டேரில் மிட்செல் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார். கான்வே 46 ரன்களும் ஜிம்மி நீஷம் 11 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தார்கள்.  

இதன்மூலம் கடந்த மூன்று வருடங்களில் மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில்  இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி.

இந்நிலையில் அரையிறுதியை வென்ற தருணத்தில் எல்லைக்கோட்டுக்கு வெளியே இருந்த நியூசிலாந்து வீரர்கள், வெற்றியைக் கொண்டாடினார்கள். ஆனால் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த நீஷம் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தார். இந்தப் படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதற்குப் பதில் அளித்த நீஷம் கூறியதாவது:

வேலை முடிந்துவிட்டதா? நான் அப்படி நினைக்கவில்லை என்றார்.

அதாவது, உலகக் கோப்பையை வெல்லும் பணி இன்னும் நிறைவடையவில்லை, இறுதிச்சுற்றிலும் தங்கள் அணி சிறப்பாக விளையாட வேண்டும் எனும் அர்த்தத்தில் அவர் சொன்ன பதிலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT