ஆப்கானிஸ்தான் போட்டியில் ரோஹித் சர்மா.  Ricardo Mazalan
டி20 உலகக் கோப்பை

வெற்றிக்கு காரணம் இவர்கள்தான்: ரோஹித் சர்மா நெகிழ்ச்சி!

சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை வெல்வதற்கு காரணமானவர்கள் குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

DIN

சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை வெல்வதற்கு காரணமானவர்கள் குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது.

182 ரன்கள் இலக்குடன் பேட் செய்ய களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த வெற்றி குறித்து ரோஹித் சர்மா பேசியதாவது:

அனைத்து வீரர்களுமே சிறப்பாக செயல்பட்டார்கள். அதனால்தான் நான் எப்போதும் சொல்வது ஒவ்வொருவரும் தங்களது பங்கினை சிறப்பாக செய்தாலே போதுமானது. இதனால்தான் எங்களால் வெற்றி பெற முடிந்தது. தொடர்சியாக விக்கெட்டுகள் வீழ்ந்த நேரத்தில் ஹார்திக் பாண்டியாவும் சூர்யகுமார் யாதவ்வும் இணைந்து செயல்பட்டதுதான் முக்கியமான பார்ட்னர்ஷிப்பாக பார்க்கிறேன். அதனால் யாராவது ஒருவர் கடைசி வரை விளையாடுவது நல்லது. சூர்யா ஹார்த்திக்கு உடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பினை அமைத்தார். 

ஹார்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ்.

ஜஸ்ப்ரீத் பும்ரா தான் ஜஸ்ப்ரித் பும்ராவாக பல வருடங்களாக இருக்கிறார். எங்கு விளையாடினாலும் ஒரு அணிக்கு அவரிடம் இருந்து என்ன தேவை என்பதை சரியாக புரிந்துக்கொண்டு அந்தக் கடைமையை செய்ய தயாராக இருக்கிறார். 

ஜஸ்ப்ரீத் பும்ரா உடன் ரோஹித்.

ஆடுகளத்தினை கணித்து அதற்கேற்றார்போல் எது சரி எது தவறு என செயல்பட வேண்டியது எனது கடமை. அதற்காகதான் 3  சுழல் பந்து வீச்சாளர்களுடன் இன்று விளையாடினோம். 

அடுத்த போட்டியில் வேகப் பந்து வீச்சாளர்கள் தேவைப்பட்டால் அதற்கேற்றார்போலவும் களமிறங்குவோம் என்றார். 

சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்தினை நாளை  (ஜூன் 22) எதிர்கொள்கிறது இந்தியா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மிகப்பெரியளவில் கேள்விக்குறியாகி உள்ளது! -அகிலேஷ் யாதவ்

சென்ராயப் பெருமாள் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

SCROLL FOR NEXT