சூப்பர் 8: வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பைசூப்பர் 8: வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
வங்கதேச அணியில் டஸ்கின் அகமது இன்றையப் போட்டியில் விளையாடவில்லை.