கௌதம் கம்பீர்  படம் | கேகேஆர் (எக்ஸ்)
டி20 உலகக் கோப்பை

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்பு குறித்து பேசிய கௌதம் கம்பீர்!

டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ள இந்திய அணிக்கு முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ள இந்திய அணிக்கு முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணிக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் நடைபெறுவதைக் காட்டிலும் சிறப்பானதாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிடிஐ-ல் அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பையை வெல்ல மிக முக்கிய பங்காற்றிய இருவரும் தங்களது ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறந்த வீரர்கள். உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் ஓய்வு பெற்றது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் நடைபெறுவதைவிட சிறப்பானது. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் நிறைய பங்காற்றியுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்றார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்நாட்டு கடல்சார் தொழில் துறையில் ரூ.80 லட்சம் கோடி முதலீடு எதிர்பார்ப்பு: சர்வானந்த சோனோவால்

நீதிபதிகள் பதவி உயர்வு விவகாரம்: அக்.28 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை

தில்லி தெற்காசிய பல்கலை. வளாகத்தில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: மாணவர்கள் போராட்டம்

வாக்காளர் பட்டியலில் முறைகேடு: மகாராஷ்டிர தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சிகள் புகார் மனு

லடாக்: பாதுகாப்புக்கு பாதகமாகச் செயல்பட்டதால் வாங்சுக் கைது: உச்சநீதிமன்றத்தில் லே ஆட்சியர் பதில்

SCROLL FOR NEXT