முகப்பு
தமிழ்நாடு

டாக்டர் ஏ.என். சந்திரசேகரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை, ஜன. 8: மூட்டு தசை, இணைப்பு திசு நிபுணர் டாக்டர் ஏ. என். சந்திரசேகரனுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.  சென்னையில் சனிக்கிழமை நடை

Updated On : 20 செப்டம்பர் 2012, 7:20 am IST
பகிர்:

சென்னை, ஜன. 8: மூட்டு தசை, இணைப்பு திசு நிபுணர் டாக்டர் ஏ. என். சந்திரசேகரனுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.

 சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, டாக்டர் ஏ.என். சந்திரசேகரனுக்கு இந்த விருதை வழங்கினார்.

 ஓய்வு பெற்ற அரசு மருத்துவரான ஏ.என். சந்திரசேகரன், இந்தியாவில் முதன் முதலில் மூட்டு தசை மற்றும் இணைப்பு திசு நோய்களை குணப்படுத்தும் சிறப்பு மருத்துவப் பிரிவை (டி.எம்.ரூமடாலஜிஸ்ட்) தொடங்க காரணமாக இருந்தவர்.

Advertisement

Advertisement

 மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய சாதனைகளுக்காக, மிக உயரிய மருத்துவ தேசிய விருதான -பி.சி.ராய்- விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு

 விழாவில் ஆளுநர் பர்னாலாவிடம் இருந்து வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூட்டு, தசை,

 இணைப்பு திசு நிபுணர் டாக்டர் ஏ.என். சந்திரசேகரனைப் பாராட்டுகிறார் துணை முதல்வர் ஸ்டாலின்.

 உடன் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.