அரசு அச்சகங்களுக்கு தீத் தடுப்பு சாதனங்கள்
அரசு அச்சகங்களில் ரூ. 2 கோடியில் தீத் தடுப்பு சாதனங்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அரசு அச்சகங்களில் ரூ. 2 கோடியில் தீத் தடுப்பு சாதனங்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
சட்டப் பேரவையில் செய்தி, விளம்பரம், எழுதுபொருள், அச்சுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசியபோது இதுதொடர்பாக அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு:
எழுதுபொருள், அச்சுத் துறை அலுவலகங்கள், அரசுக் கிளை அச்சகங்களில் தீத் தடுப்பு சாதனங்கள், கண்காணிப்பு கேமராக்கள் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் பொருத்தப்படும்.
மதுரை அரசுக் கிளை அச்சகத்தில் நவீன இரு வண்ண வெப் ஆஃப்செட் இயந்திரம் ரூ. 1.50 கோடியில் நிறுவப்படும். அரசு அச்சகங்களில் இரவு நேரப்படி ரூ. 25-இல் இருந்து ரூ. 50-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.