தயாநிதி மாறனை கைது செய்வதற்கான தடையை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்
சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் வைத்திருந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது
சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் வைத்திருந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்ய தடை விதித்து பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
சிபிஐ தொடர்ந்த வழக்கில், விசாரணைக்கு ஒத்துழைக்காததால், தயாநிதி மாறனின் முன் ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ முன் சரணடையவும் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து தயாநிதி மாறன் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தயாநிதி மாறனை செப்டம்பர் 14ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று தடை விதித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியும், மறு உத்தரவு வரும் வரை தயாநிதி மாறனை கைது செய்வதற்கான தடையை நீட்டித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த விசாரணை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.