தீவிரவாதி கிச்சான்புகாரி திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்
திருநெல்வேலியில் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு தொடர்பாக, தீவிரவாதி கிச்சான் புகாரி இன்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
திருநெல்வேலியில் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு தொடர்பாக, தீவிரவாதி கிச்சான் புகாரி இன்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பாளை அருகே பஸ்மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தீவிரவாதி கிச்சான் புகாரி இன்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
அமெரிக்காவில் எடுக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து, திருநெல்வேலியில் 2012-ஆம் ஆண்டு ரயில் மறியல் நடைபெற்றது. அப்போது போராட்டக் குழுவினருக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, டக்கரம்மாள்புரத்தில் சென்று கொண்டிருந்த பஸ் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீஸார் 11 பேர் மீது வழக்குப் பதிந்தனர். அவர்களில், அண்மையில் வெடிபொருள் பதுக்கல் வழக்கில் கைதான பறவை பாதுஷாவும் ஒருவராவார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்-1ல் விசாரணை நடைபெற்று வருகிறது. .
இதனிடையே தீவிரவாதி கிச்சான்புகாரி பெங்களூர் பாஜக அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஆஜராக பெங்களூரில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கிச்சான்புகாரியை கர்நாடக போலீஸார் நெல்லைக்கு அழைத்து வந்தனர்.
பாளை சிறையில் இருந்து பறவை பாதுஷா, முகமது சாலி ஆகியோரையும் நீதிமன்றத்திற்கு போலீஸார் அழைத்து வந்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் 6 பேர் ஆஜரானார்கள்.
கிச்சான்புகாரி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் ‘மெட்டல் டிடக்டர்’ பொருத்தப்பட்டன. அனைவரையும் சோதித்த பின்னரே நீதிமன்றத்திற்குள் போலீஸார் அனுமதித்தனர். இருப்பினும் கிச்சான்புகாரியை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் நீதிமன்றத்தில் முன்பு குவிந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராமலிங்கம் விசாரணையை இம்மாதம் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து பறவை பாதுஷா, முகமது சாலி ஆகியோரை பாளை சிறைக்கு போலீஸார் அழைத்து சென்றனர்.
கிச்சான்புகாரியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என கோரி அவரது உறவினர்கள் சிறை வளாகத்தை முற்றுகையிட்டனர். இதனால் சுமார் 1 மணிநேரத்திற்கு பின் கிச்சான்புகாரியை கர்நாடகா போலீஸார் அழைத்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.