FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வீட்டு மனைப் பட்டா வழங்கப்படுமா?

சென்னை வியாசர்பாடியில் வசிக்கும் பர்மா தமிழர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படுமா என்று

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

சென்னை வியாசர்பாடியில் வசிக்கும் பர்மா தமிழர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படுமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் குழுத் தலைவர் அ.சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
 சட்டப் பேரவையில் வருவாய்த் துறை, செய்தி, விளம்பரத் துறைகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பிறகு அவர் பேசியதாவது:
 அனைத்து நீர்நிலைகளிலும் சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அகற்றவும், அவற்றை பழைய நிலைக்குக் கொண்டு வரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தனது பதிலுரையில் தெரிவித்தார்.
 ஆனால், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களும், பேருந்து நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன.
 பல ஆண்டுகளுக்கு முன் வியாசர்பாடி ஏரியில் மாநில அரசால் குடியமர்த்தப்பட்ட பர்மா தமிழர்களில் ஒரு பிரிவினருக்கு இன்னுமும் பட்டா கிடைக்கவில்லை. அவர்களுக்கு பட்டா வழங்கப்படுமா என்று சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments