FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காரைக்குடி ஆவின் மேலாளர் மீது தற்கொலை முயற்சி வழக்கு

காரைக்குடி ஆவின் நிறுவன மேலாளர் மீது சனிக்கிழமை தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

காரைக்குடி ஆவின் நிறுவன மேலாளர் மீது சனிக்கிழமை தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் உற்பத்தி பிரிவு மேலாளராக பணியாற்றி வருபவர் செ. கதிரேசன் (56). இவர் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணைக்காக வந்த நிலையில், தற்கொலை செய்யப்போவதாகக் கூறி தூக்க மாத்திரைகளை வாயில் போட்டுக்கொண்டாராம்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் செல்வம் காரைக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கணேஷ்தாஸ், கதிரேசன் மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Advertisement

Advertisement

வட்டாட்சியர் விசாரணை: சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியது: ஆவின் பொதுமேலாளர், சென்னை ஆவின் கூடுதல் இயக்குநர் ஆகியோர் தனக்கு அலுவலக ரீதியாக தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக, ஆவின் உற்பத்தி பிரிவு மேலாளர் கதிரேசன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஆட்சியர் உத்தரவின்படி, காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், தேவ கோட்டை கோட்டாட்சியர் சிதம்பரம், கதிரேசனிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிந்து வெளியே வந்த கதிரேசன் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி மாத்திரைகளை வாயில்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதைத்தொடர்ந்தே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments