முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதி வீடு திரும்பினார்: ஜனவரி 4ம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம்

மருத்துவமனையில் இருந்து கருணாநிதி வீடு திரும்பியதைத் தொடர்ந்து ஜனவரி 4ம் தேதி திமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

Updated On : 26 டிசம்பர், 2016 at 12:25 PM
பகிர்:


சென்னை: மருத்துவமனையில் இருந்து கருணாநிதி வீடு திரும்பியதைத் தொடர்ந்து ஜனவரி 4ம் தேதி திமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் 20-12-2016 செவ்வாய்க் கிழமை அன்று, சென்னை,  அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் வருகிற 4-1-2017 புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உடல்நிலை பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, பூரண குணமடைந்ததை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.