முகப்பு
தமிழ்நாடு

பரபரப்பான தமிழக அரசியல் சூழல்: சமூக ஊடக பயனாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

முதல்வர் பன்னீர்செல்வத்தின் பேட்டியைத் தொடர்ந்து தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ள நிலையில் தமிழக சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ...

Updated On : 8 பிப்ரவரி, 2017 at 12:56 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:28 PM

சென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்தின் பேட்டியைத் தொடர்ந்து தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ள நிலையில் தமிழக சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தகவல்களை பரப்புபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள் தற்போது தமிழக அரசியலை அனல் பறக்கச் செய்துள்ளது. அவரது குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. அவருக்கு ஆதராவாக பல்வேறு  தகவல்களை பரவச் செய்கின்றனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல திரண்டு விடுவார்களோ என்ற அச்சம் காவல்துறையினரிடம் உண்டாகியுள்ளது. இதனால் சமூக ஊடகங்களில் பரப்பப்படும்  தகவல்களை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Advertisement

மேலும் அரசுக்கு எதிராகவும், சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் தகவல்களை பரப்புபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.