நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரி மனிதச் சங்கிலி : திமுக அறிவிப்பு
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரி வரும் 27ம் தேதி திமுக சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடுநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரி மனிதச் சங்கிலி : திமுக அறிவிப்பு
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரி வரும் 27ம் தேதி திமுக சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரி வரும் 27ம் தேதி திமுக சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் இன்று காலை ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி வரும் ஜூலை 27ம் தேதி சென்னை உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை 4 மணிக்கு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி வளர்மதி மற்றும் திருமுருகன் காந்தியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஆகஸ்ட் 10, 11ம் தேதிகளில் சென்னையில் முரசொலி பவளவிழா நடைபெறும் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.