முகப்பு
தமிழ்நாடு

சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வரை தாக்கி மண்டை உடைப்பு!

அடையாள அட்டை இல்லாமல் கல்லூரிக்குள் நுழைந்த 18 மாணவர்களை சோதனை செய்த பொழுது,   சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் காளிராஜ் மீது தாக்குதல் நடத்தி அவரது மண்டை உடைக்கப்பட்டது.

Updated On : 16 ஜூன், 2017 at 4:52 PM
பகிர்:

சென்னை: அடையாள அட்டை இல்லாமல் கல்லூரிக்குள் நுழைந்த 18 மாணவர்களை சோதனை செய்த பொழுது,   சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் காளிராஜ் மீது தாக்குதல் நடத்தி அவரது மண்டை உடைக்கப்பட்டது.

விடுமுறை முடிந்து இன்று சென்னையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன.அதன்படி சென்னை பச்சையப்பன் கல்லூரியும் இன்று திறக்கப்பட்டது. இந்த கல்லூரியை பொறுத்த வரை அடையாள அட்டை இல்லாத மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்க ப்பட மாட்டார்கள்.

இன்று காலை மாணவர்கள் கல்லூரி திறப்பை வெடி வெடித்து கொண்டாடினர். அப்பொழுது பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக காவல்துறையினர் மற்றும் மாணவர்களுக்கு இடையே சிறிய அளவில் தகராறு ஏற்பட்டது.  

Advertisement

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த முதல்வர் காளிராஜ் மற்றும் பேராசிரியர்கள் அங்கு கூடியிருந்த மாணவர்களை, அடையாள அட்டையை சரிபார்த்து கல்லூரிக்குள் செல்ல அனுமதித்தனர்.  அப்பொழுது எந்த விதமான  அடையாள அட்டையும் இல்லாத 18 மாணவர்கள் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் அவர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே மீண்டும் தகராறு துவங்கியது. அப்பொழுது காவல்துறையினரை நோக்கி வீசப்பட்ட கல் ஒன்று, கல்லூரி முதல்வர் காளிராஜ் தலையில் பட்டு, அவருக்கு பலத்த காயத்தினை உண்டாக்கியது.

அத்துடன் அவரது காரும் தாக்குதலுக்கு உள்ளது. இது தொடர்பாக ஆறு கல்லூரிகளை சேர்ந்த 36 மாணவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.