கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவுக்கு பாஜகவை அழைப்பதில் தவறில்லை: எச்.வசந்தகுமார்
கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவுக்கு பாஜகவை அழைப்பதில் தவறில்லை என்றார் தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் தலைவர்
நாகர்கோவில்: கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவுக்கு பாஜகவை அழைப்பதில் தவறில்லை என்றார் தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் தலைவர் எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ.
நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இனயம் துறைமுகத் திட்டத்தை ஒருசாரார் எதிர்க்கிறார்கள். மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் சிதையாமல், மக்களுக்கான வாழ்வாதார ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துவிட்டு துறைமுகத்தைத் தொடங்கலாம்.
குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்தது நல்ல திட்டம். அதனால் குளங்கள் ஆழமாகும்.
கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவுக்கு பாஜக தலைவர்களை அழைப்பதும் அழைக்காமல் இருப்பதும் அவர்களது தனிப்பட்ட விருப்பம். இருப்பினும், நாட்டின் மூத்த அரசியல் தலைவரின் விழாவுக்கு பாஜகவை அழைப்பதில் தவறு இல்லை.
நீட் தேர்வில் கடும் சோதனை செய்தது தவறுதான். ஆனால், தமிழகத்தில் மாணவர்களை நீட் தேர்வை சந்திக்கும் அளவுக்கு தயார்படுத்த வேண்டும். அதுவரை குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
அதிமுகவின் இரு அணியும் இணைந்தாலும் மீண்டும் அவர்களுக்குள் பிரச்னை நடக்கும் என்றார் அவர்.