முகப்பு
தமிழ்நாடு

நான் முதல்வராக இருந்தாலும் சாதாரண பழனிசாமிதான்: சேலத்தில் முதல்வர் பேச்சு

ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது. எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் தடைகள் வந்தாலும் இந்த ஆட்சி தொடரும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

Updated On : 18 செப்டம்பர், 2017 at 12:19 PM
file photo
பகிர்:


சேலம்: ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது. எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் தடைகள் வந்தாலும் இந்த ஆட்சி தொடரும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

சேலத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சாதாரண தொண்டர் கூட உயர் பதவிக்கு வர  முடியும் என்ற நிலை அதிமுகவில் மட்டுமே உள்ளது. நான் முதல்வராக இருந்தாலும் சாதாரண பழனிசாமிதான்.

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் தயாராக வேண்டும்.

Advertisement

ஆட்சிக்கு எதிராக எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும் தகர்த்தெறிவோம். ஆட்சியை கலைக்கும் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அஸ்திவாரமாய் தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. ஆட்சியைக் கலைக்க எத்தனையோ திட்டம் போட்டார் ஸ்டாலின். ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த, அவப்பெயர் ஏற்படுத்த ஸ்டாலின் பல போராட்டங்களை நடத்தினார். எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும் ஒருமித்து செயல்பட்டால் தடைகளை தகர்த்தெறியலாம் என்று கூறினார் முதல்வர் பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.