'செல்ஃபியால் சீறிய சிவகுமார்' இளைஞரின் செல்ஃபோனை பட்டென தட்டிவிட்டார்- வைரலாகும் விடியோ
நடிகர் சிவகுமாருடன் அங்கிருந்த இளைஞர் தனது மொபைலில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த சிவகுமார்...
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தனியார் கருத்தரிப்பு மையம் திறப்பு விழாவில் பிரபல திரைப்பட நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். இதையடுத்து நடிகர் சிவகுமாரை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.
இந்நிலையில், நடிகர் சிவகுமாருடன் அங்கிருந்த இளைஞர் தனது மொபைலில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த சிவகுமார், அந்த இளைஞரின் கையில் இருந்த மொபைலை பட்டென தட்டிவிட்டார். இதனால் அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த விடியோ பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் யோகா கற்றுத்தேர்ந்த ஒருவர் இவ்வாறு அமைதி காக்காமல் நடப்பதா? ஊருக்கு மட்டும் தான் உபதேசமா என்பது போன்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.