தமிழ்நாடு

காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக குடியிருப்போரை அகற்றுக: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

DIN

சென்னை: காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக குடியிருப்போரை அகற்ற வேண்டும் என்று தமிழக   டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை எழும்பூரைச் சேர்ந்த ரகுபதி என்ற காவலர் சிந்தாதிரிப்பேட்டை காவலர் குடியிருப்பில் தனக்கு வீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார்.

இந்த வழக்கானது வியாழன்று நீதிபதி சுப்ரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வாதத்தைக்கேட்ட பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:

தமிழகத்தில் உள்ள காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக குடியிருப்பது அதிகரித்துள்ளது.

அவ்வாறு சட்டவிரோதமாக குடியிருப்போரை அகற்ற டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு குடியிருப்பவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.

அதற்கு சரியாக விளக்கம அளிக்காதவர்கள் 60 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்யுமாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.   

அடுத்து வரும் இரண்டு வாரங்களில் ஆன்லைன் மூலம் உரியவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று, சீனியாரிட்டி அடிப்படையில் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT