சென்னை அருகே கிரிக்கெட் பந்து பட்டு இளைஞர் மைதானத்திலேயே மரணம்
சென்னை அருகே கிரிக்கெட் பந்து பட்டு இளைஞர் மைதானத்திலேயே மரணமடைந்த அதிர்ச்சி சம்பவம் அடைந்துள்ளது.
சென்னை: சென்னை அருகே கிரிக்கெட் பந்து பட்டு இளைஞர் மைதானத்திலேயே மரணமடைந்த அதிர்ச்சி சம்பவம் அடைந்துள்ளது.
சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் ஆதனூர் ஏரி உள்ளது. நீரின்றிக் காய்ந்துளள இதில் உள்ளூர் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.
அதன்படி திங்களன்று இளைஞர்கள் சிலர் அங்கே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது, ராமச்சந்திரன் என்ற இளைஞரின் மார்பில் கிரிக்கெட் பந்து பலமாகத் தாக்கியது.
Advertisement
உடனேயே மைதானத்திலே யே சுருண்டு விழுந்த அவர் அங்கேயே மரணமடைந்தார். இதனால் அவரோடு விளையாடியவர்கள் அதிர்ச்சியடைந்ததனர்.
தகவல் அறிந்து அங்கு அந்த போலீசார் ராமச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.