முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி - அதிமுக மாநிலங்களவை எம்.பி. வைத்திலிங்கம் ‘திடீர்’ சந்திப்பு 

தமிழக முதல்வர் பழனிசாமியை அதிமுக மாநிலங்களவை எம்.பி. வைத்திலிங்கம் புதனன்று  சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில்  சந்தித்து பேசினார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:01 AM
பகிர்:

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமியை அதிமுக மாநிலங்களவை எம்.பி. வைத்திலிங்கம் புதனன்று  சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில்  சந்தித்து பேசினார்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தோல்வியடைந்தார். ஆனால் அப்போதைய முதல்வர்  ஜெயலலிதா அவரை மாநிலங்களவை எம்பி ஆக்கினார். அத்துடன் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பும் அவருக்கு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியை அதிமுக மாநிலங்களவை எம்.பி. வைத்திலிங்கம் புதனன்று  சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில்  சந்தித்து பேசினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அமைந்துள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அவரை வைத்திலிங்கம் சந்தித்து பேசினார். நாளை தில்லியில் பதவியேற்க உள்ள மோடியின் அமைச்சரவையில்  வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளதாக அதிமுக வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சூழ்நிலையில் நடைபெறும் இந்த சந்திப்பானது  முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →