9 வங்கிக் கணக்கு; ஆனால் வைத்திருப்பது டிவிஎஸ் எக்ஸ்எல்: திமுகவின் அழகான வேட்பாளரின் பின்னணி
தென் சென்னை தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்.
சென்னை: தென் சென்னை தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்.
இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் இணைத்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில் இவரது சொத்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 5 வங்கிகளில் இவருக்கு 9 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. ஆனால், இவரது பெயரிலோ அல்லது இவரது கணவர் சந்திரசேகர் பெயரிலோ ஒரு கார் கூட இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இவரது கணவர் பெயரிலும் பல்வேறு வங்கிகளில் ஏராளமான வங்கிக் கணக்குகள் இருக்கின்றன.
இவர் பெயரில் இருக்கும் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 14 லட்சத்து, 43,792. இவரது கணவரின் பெயரில் இருக்கும் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1,12,20,170. தமிழச்சியின் பெயரில் ரூ.4,72,64,774 மதிப்புள்ள அசையா சொத்துகளும், கணவரின் பெயரில் ரூ.1,84,04,855 மதிப்புள்ள அசையா சொத்துகளும் உள்ளன.
இதில்லாமல், தமிழச்சி தங்கபாண்டியன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அவரது பெயரில் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் இரு சக்கர வாகனமும், கணவர் சந்திரசேகர் பெயரில் ஹோண்டா ஆக்டிவாவும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.