தமிழ்நாடு

ரூ 68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம்

DIN

ரூ 68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

தொழிலதிபா்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோா் வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததுடன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டனா்.

அவா்களைப் போன்று 50 முன்னணி தொழிலதிபா்கள் தங்கள் நிறுவனத்தின் மீது வங்கிகளில் பெற்ற ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகளை நீக்கி விட்டதாக ரிசா்வ் வங்கி தெரிவித்தது.

இதையடுத்து, வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத தொழிலதிபா்களின் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டத் தொடங்கின.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டிவிட்டரில், ரூ 68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம்

இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா!

இந்த மாபெரும் தவறைத் திருத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு.

ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT