தமிழ்நாடு

வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி: ஓபிஎஸ்

DIN

ரஜினி அரசியல் கட்சி தொடங்கியதற்கு வரவேற்பு அளிப்பதாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

தேனி அருகே துப்புக்குண்டுவில் புதிதாக அமையவுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிடுவதற்கு வந்திருந்த துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

'ரஜினி அரசியல் கட்சி தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அவரது வரவு நல்வரவாக இருக்கட்டும். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அரசியலில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நிகழலாம். வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமையும்' என்று பதிலளித்துள்ளார். 

முன்னதாக ரஜினியின் அரசியல் வருகை குறித்து முதல்வர் பழனிசாமி, ரஜினியின் பேட்டியை முழுமையாகப் பார்க்கவில்லை என்றும் பார்த்தபின்னர் கருத்து கூறுவதாகவும் தெரிவித்திருந்தார். 

ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், கட்சி தொடங்கப்படும் தேதி டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT