சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு
சென்னையில் அம்பத்தூர், ஆலந்துர், சோளிங்கநல்லூர், எழும்பூர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 50 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் அம்பத்தூர், ஆலந்துர், சோளிங்கநல்லூர், எழும்பூர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 50 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.
வங்க கடலில், மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய புரெவி புயல் சற்றே விலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டிருந்தது.
இது மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ராமநாதபுரம் மற்றும் அதையெட்டியுள்ள தூத்துக்குடி கடற்கரையை அடுத்த சில நேரங்களில் கடக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னையில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 399.60 மி.மீ. மழை பெய்துள்ளது.
அதாவது, புரசைவாக்கத்தில் 26.80 மி.மீ. மழையும், பெரம்பூரில் 40.20 மி.மீ. மழையும் அம்பத்தூரில் 56 மி.மீ. மழையும் அயனாவரத்தில் 36 மி.மீ. மழையும் எழும்பூரில் 54.30 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
அதுபோலவே, தண்டையார்பேட்டையில் 29.30 மி.மீ. மழையும் மாம்பலத்தில் 23.40 மி.மீ. மழையும் கிண்டியில் 12.40 மி.மீ. மழையும் மயிலாப்பூரில் 12.40 மி.மீ. மழையும் ஆலந்தூரில் 55.40 மி.மீ. மழையும் சோளிங்கநல்லூரில் 53.40 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.