சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் பேரணி: எச்.ராஜா தகவல்
என்.ஆர்.சி., என்.பி.ஆர்., சி.ஏ.ஏ. திட்டங்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக சார்பில் விரைவில் பேரணி நடைபெறும் என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
என்.ஆர்.சி., என்.பி.ஆர்., சி.ஏ.ஏ. திட்டங்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக சார்பில் விரைவில் பேரணி நடைபெறும் என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா கூறியதாவது:
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக பலர் மத பதற்றத்தை உருவாக்கும் வகையில் வேண்டுமென்றே கருத்து தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவர முயற்சித்த திட்டங்களை இன்று அவர்களே எதிர்க்கிறார்கள்.
ப.சிதம்பரம் அறிவுடையவராக எனக்கு தெரியவில்லை. அவர் கலவர சிந்தனையோடு செயல்படுகிறார்.
தமிழகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்துகிறார்கள். காவல்துறையினரின் அனுமதியின்றி விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடைபெற வேண்டும்.
100 கோடி இந்துக்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் என்ன ஆகும் என்பதை செங்கோட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் நிரூபித்துள்ளோம்.
நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது அவர்களது விருப்பம்.
என்.ஆர்.சி., என்.பி.ஆர்., சி.ஏ.ஏ. திட்டங்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக சார்பில் விரைவில் பேரணி நடைபெறும் என்று தெரிவித்தார்.