முகப்பு
தமிழ்நாடு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து விழுப்புரத்தில் பாஜக பேரணி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து, விழுப்புரத்தில் பாஜக சார்பில் பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:01 PM
பகிர்:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து, விழுப்புரத்தில் பாஜக சார்பில் பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி கிழக்கு பாண்டி ரோடு திருச்சி சாலை வழியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே முடிவடைந்தது. பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் சிறப்புரையாற்றினார். 

மாவட்ட தலைவர் முன்னாள் எம்எல்ஏ விஏடி கலிவரதன் தலைமை வகித்தார். ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தின் நன்மைகள், அதற்கு எதிராக மதக்கலவரத்தை தூண்டிவிடும் வகையில் செயல்படும் திமுகவை கண்டித்தும் கோஷமிட்டு வந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →