தமிழ்நாடு

தஞ்சாவூருக்கு வந்த காவிரி நீர்

DIN


தஞ்சாவூர் கல்லணைக் கால்வாயில் வியாழக்கிழமை பிற்பகல் காவிரி நீர் வந்தடைந்தது. 

மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி  திறக்கப்பட்டதைத் தொடர்ந்து,  டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காகக் கல்லணையும் ஜூன் 16-ம் தேதி திறக்கப்பட்டது.

வெண்ணாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சாவூருக்கு புதன்கிழமை மாலை வந்தடைந்தது. காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் திருவையாற்றுக்கு வியாழக்கிழமை காலை வந்தது.

கல்லணைக் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர்  தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை பிற்பகல் வந்தது. இதனிடையே  தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில் கல்லணைக் கால்வாயில்  முற்பகலில் வந்த தண்ணீரை  பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி, மலர் தூவி வழிபட்டனர்.

கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை வரை விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், வியாழக்கிழமை காலை விநாடிக்கு 1,011 கன அடி வீதம் திறந்துவிடப்படுகிறது.

இதேபோல காவிரியில் விநாடிக்கு 3,262 கன அடி வீதமும், வெண்ணாற்றில் விநாடிக்கு 3,275  கன அடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT