முகப்பு
தமிழ்நாடு

கூடுதல் கட்டுப்பாடுகள்? ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 9ம்தேதியுடன் முடிவடைய

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
கூடுதல் கட்டுப்பாடுகள்? ஸ்டாலின் இன்று ஆலோசனை
பகிர்:

சென்னை: தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 9ம்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 12.30  மணியளவில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தற்போது கரோனா தொற்று அதிகரிப்பதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்பிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி பொதுமுடக்கத்தை ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், 9ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடையும் நிலையிலும், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் முக்கியத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ஏற்கனவே, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய  சந்தைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு  கோயில்களில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →