முகப்பு
தமிழ்நாடு

ஆரணியில் கருணாநிதியின் நினைவுநாள் அனுசரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
ஆரணியில் கருணாநிதியின் நினைவுநாள் அனுசரிப்பு
பகிர்:


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

ஆரணி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணா சிலை முன்பு மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நகரச் செயலாளர் ஜிபி வெங்கடேசன் தலைமையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட திமுக கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கருணாநிதியின் முழு உருவப் படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்த அனுசரிப்பு நிகழ்ச்சியில் முன்னாள் நகரச் செயலாளர் கண்ணதாசன் வழக்கறிஞர் அன்பு அண்ணன் முன்னாள் கவுன்சிலர் கரிகாலன்  உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆரணி பேரூராட்சி அமைந்துள்ள 15 வார்டுகளிலும் கருணாநிதியின் முழு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. மேலும் ராமர் கோயில் அருகே அமைந்துள்ள கும்மடம் பகுதியில் வழக்கறிஞர் ரமேஷ் அவர்கள் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.