முகப்பு
தமிழ்நாடு

புகழ்ந்து பேசினால் நடவடிக்கை: திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் தன்னைப் புகழ்ந்து  பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எம்எல்ஏக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
புகழ்ந்து பேசினால் நடவடிக்கை: திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
பகிர்:


சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தன்னைப் புகழ்ந்து  பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எம்எல்ஏக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையின் நேரம் கருதி, தன்னைப் புகழ்ந்து பேசுவதை திமுக எம்எல்ஏக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்றே கூறியிருந்த நிலையில், இன்றும் அது தொடர்ந்ததால்,  நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீது பேசிய திமுக எம்எல்ஏ ஐயப்பன், முதல்வர் ஸ்டாலின் குறித்து புகழ்ந்து பேசிக் கொண்டிருந்த போது, குறுக்கிட்டுப் பேசிய முதல்வர், பேரவையில் தன்னைப் புகழ்ந்து பேசுவதைக் குறைத்துக் கொள்ளவில்லை என்றால் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும், எதையும் லிமிட் ஆக வைத்துக் கொள்ளுங்கள். நேற்றே இது பற்றி கட்டளையிட்டேன். திமுக எம்எல்ஏ ஐயப்பன் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்டாலின் கூறினார்.
 

எப்போதும் புகழ்ச்சி வேண்டாம்..

எப்போதும் புகழ்ச்சி உரைகளைக் கூற வேண்டாமென அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். சட்டப்பேரவையிலேயே அவர் இதனைப் பதிவும் செய்தார்.

சட்டப்பேரவயில் சட்டத்துறை தொடர்பான மசோதாவை அந்தத் துறையின் அமைச்சர் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். மசோதா தாக்கலுக்கு முன்பாக அவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரையும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர், கேள்வி நேரம், சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய முன்வரும்போது நேரடியாக விஷயத்துக்கு வர வேண்டும். மானியக் கோரிக்கையில் பேசும் போதோ, பதிலளிக்கும்போதோ தங்களை ஆளாக்கிய, உருவாக்கிய தலைவர்களை நினைவுகூர்ந்து பாராட்டிப் பேசலாம். எனவே, கேள்வி நேரம், சட்ட மசோதா தாக்கலின்போது இதனைச் செய்யக் கூடாது. இது தான் எனது கண்டிப்பான வேண்டுகோள். அமைச்சர்களும் திமுக உறுப்பினர்களுக்கும் இதுதான் எனது கட்டளை என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →