முகப்பு
தமிழ்நாடு

மக்கள் பதற்றம் அடையக் கூடாது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்தியாவில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
மக்கள் பதற்றம் அடையக் கூடாது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
பகிர்:

இந்தியாவில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், தென்னாப்ரிக்காவிலிருந்து நேற்றிரவு பெங்களூரு வந்துள்ளனர். ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு வயது 66. மற்றொருவருக்கு வயது 46. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விழிப்புணர்வுடன், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். டெல்டா கரோனாவை விட 5 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது ஒமைக்ரான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக மக்கள் யாரும் பதற்றம் அடையாமல் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →