திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சீர்காழி அடுத்த அத்தியூர் ஊராட்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு 200 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நடந்தது.
சீர்காழி: சீர்காழி அடுத்த அத்தியூர் ஊராட்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு 200 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நடந்தது.
ஒன்றியக் குழுத் தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் செல்ல சேது ரவிக்குமார், மலர் விழி, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் மகா. அலெக்சாண்டர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் ரவி, அவை தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.
எம்எல்ஏக்கள் பூம்புகார் தொகுதி நிவேதா.முருகன், சீர்காழி தொகுதி பன்னீர்செல்வம் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில் நகர செயலாளர் சுப்பராயன், நிர்வாகிகள் செல்வ முத்துக்குமார், பெரியசாமி, பாஸ்கரன் பங்கேற்றனர். முடிவில் ஊராட்சி மன்றத் தலைவர் ஆதி நாயகி பாஸ்கரன் நன்றி கூறினார்