தமிழ்நாடு

கரூர் அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணி உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

DIN

கரூர்: கரூர் அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணி உறவினர் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 69 இடங்களில் புதன்கிழமை காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களிலும், கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ 4.85 கோடி சொத்து தன் மனைவி மற்றும் மகள் பெயரில் கடந்த 5 ஆண்டில் சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், தங்கமணியின் உறவினர் வசந்தி வீடு கரூர் அடுத்த வேலாயுதம் பாளையம் பாலத்துறை பகுதியில் உள்ளது. அங்கு கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT