முகப்பு
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
தமிழ்நாடு

மதுரையில் கட்டட விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்வர் 

மதுரையில் கட்டட விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

தமிழ்நாடு

மதுரையில் கட்டட விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்வர் 

மதுரையில் கட்டட விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

மதுரை கீழவெளி வீதியில் உள்ள பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த விளக்குத் தூண் காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணன் குடும்பத்தினருக்கும், காயமுற்ற மற்றொரு தலைமைக் காவலர் கண்ணனுக்கும் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

இன்று (22-12-2021) அதிகாலை, மதுரை மாநகர் விளக்குத் தூண் காவல் நிலையத் தலைமைக் காவலர்கள் சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இரவு பாதுகாப்புப் பணிக்குச் சென்றபோது, கீழவெளி வீதியில் உள்ள கணபதி ஸ்டோர் என்ற பூச்சி மருந்துக் கடையின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, பாழடைந்த நிலையில் இருந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் தலைமைக் காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு தலைமைக் காவலரான கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயமும், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்ட நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மிகவும் வேதனையுற்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணமும், அவரது மனைவிக்கு அரசுப் பணியும், அதோடு மட்டுமல்லாமல் பலத்த காயமும், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு தலைமைக் காவலரான கண்ணனுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →