FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர் தின விழா: மாவட்ட ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். 

Updated On : 1 ஜூலை 2021, 3:17 pm IST
மயிலாடுதுறை வட்டார மருத்துவ அலுவலர் சரத்சந்தருக்கு நினைவுப் பரிசினை வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா. உடன், மருத்துவத்துறை இணை இயக்குநர் ஆர்.மகேந்திரன் உள்ளிட்டோர்.
பகிர்:

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட மருத்துவர் தினவிழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை எம்.பி. செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் எஸ்.ராஜகுமார், நிவேதா எம்.முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மருத்துவர்களின் சேவையைப் பாராட்டினர். 

மருத்துவத் துறையில் சேவையாற்றி, அத்துறைக்கு பெருமை சேர்த்த டாக்டர் பி.சி.ராயின் நினைவைப் போற்றும் வகையில், அவர் பிறந்த தினமான ஜூலை 1-ஆம் தேதி மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், மயிலாடுதுறை அழகுஜோதி அகாதெமி, பாரதிய ஜெயின் சங்கேதனா மற்றும் சென்ட்ரல் லைன்ஸ் சங்கம் சார்பில் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமை வகித்து, மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி பேசி, மருத்துவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.

Advertisement

Advertisement

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் சுகுணாவுக்கு நினைவுப் பரிசினை வழங்கிய எம்.பி செ.ராமலிங்கம். உடன், எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதா எம்.முருகன் உள்ளிட்டோர்.

பள்ளித் தாளாளர் சிவக்குமார், பள்ளி முதல்வர் நோயல்மணி, ஜெயின் சங்க நிர்வாகிகள் ராஜ்குமார் ஜெயின், லௌனீஸ், ரோனக், கிஷோர்குமார், லைன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் சிவலிங்கம், அசோக்குமார், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செ.ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ராஜகுமார் (மயிலாடுதுறை) நிவேதா எம்.முருகன் (பூம்புகார்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று மருத்துவர்களின் சேவையை வாழ்த்திப் பேசினர்.

நிகழ்ச்சியில், மருத்துவத்துறை இணை இயக்குநர் ஆர்.மகேந்திரன், தலைமை மருத்துவர் (பொறுப்பு) வீரசோழன் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை பள்ளி துணை முதல்வர் அமுதா மற்றும் ராதிகா, கங்காதேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் இளையபெருமாள், ஞான.இமயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments