முகப்பு
தமிழ்நாடு

ராகுல் காந்தி பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
ராகுல் காந்தி பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து
பகிர்:


சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு  பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், தனது சமூக ஊடகப் பக்கங்களிலும், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், எனது ஆருயிர் இளவல் ராகுல் காந்தி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, எல்லா வகையிலும் சமத்துவமான இந்தியாவை நிறுவுவதற்காக அவர் ஆற்றிவரும் தன்னலங்கருதா - ஓய்விலாப் பணியைப் பாராட்டும் அனைவரோடும் இணைகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படைப் பண்புகளின்மேல் அவருக்குள்ள ஈடுபாடு மற்றவர்க்கு எடுத்துக்காட்டாக அமையத்தக்கதாகும் என்று தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →