தமிழ்நாடு

குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை: புதிய டிஜிபி சைலேந்திரபாபு

DIN


சென்னை: தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக சி. சைலேந்திரபாபு இன்று பதவியேற்றுக் கொண்டார்.  

தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதி இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்ட சைலேந்திர பாபுவிடம் முறைப்படி அவர் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் டிஜிபி அலுவலகத்தில், தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக புதிதாக பதவியேற்றிருக்கும் சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், காவல்துறையின் தலைமை பொறுப்பை வகிப்பது என்பது அரிய வாய்ப்பு. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.

தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சட்டம் -  ஒழுங்கை பேணிக்காக்க முன்னுரிமை வழங்கப்படும்.

மக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், காவல்துறையினருக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் சைலேந்திரபாபு கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT