முகப்பு
ஊர்ந்து செல்ல நான் பாம்பா, பல்லியா? முதல்வர் பழனிசாமி
தமிழ்நாடு

ஊர்ந்து செல்ல நான் பாம்பா, பல்லியா? முதல்வர் பழனிசாமி

ஊர்ந்து சென்று தான் முதல்வராக பதவியேற்றுக் கொண்டதாக ஸ்டாலின் கூறுகிறார். ஊர்ந்து செல்ல நான் என்ன பாம்பா, பல்லியா? என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
ஊர்ந்து செல்ல நான் பாம்பா, பல்லியா? முதல்வர் பழனிசாமி
பகிர்:

புவனகிரி: ஊர்ந்து சென்று தான் முதல்வராக பதவியேற்றுக் கொண்டதாக ஸ்டாலின் கூறுகிறார். ஊர்ந்து செல்ல நான் என்ன பாம்பா, பல்லியா? என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, கடலூர் மாவட்டம் புவனகிரியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது, ஊர்ந்து சென்று தான் நான் முதல்வராக பதவியேற்றுக் கொண்டதாக ஸ்டாலின் கூறுகிறார். ஊர்ந்து செல்ல நான் என்ன பாம்பா, பல்லியா? 

ஊர்ந்து செல்லவில்லை, நடந்து சென்றுதான் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன். நான் விவசாயி, நான் விவசாயி என்று குதிப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். நான் குதித்தால் ஸ்டாலினுக்கு என்ன?

ஒரு முதல்வரை எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியாதவராக இருக்கிறார் ஸ்டாலின். செல்லும் இடமெல்லாம் பொய் சொல்லி வருகிறார் ஸ்டாலின் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →