முகப்பு
தமிழ்நாடு

காலை 8 - 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் இயங்கும்

நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:10 PM
கோப்புப்படம்
பகிர்:

நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (மே 6) முதல் நண்பகலுக்குப் பிறகு ஊரடங்கு நேரம் அமலுக்கு வருவதால் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அந்தவகையில் காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகள் காலை முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: இங்கே கிளிக் செய்யவும்...

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளும் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன.

இதனிடையே கரோனா ஊரடங்கின் காரணமாக நாளை முதல் 4 மணிநேரம் மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →