முகப்பு
தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு அப்பாவு மனுத்தாக்கல்

தமிழக சட்டப்பேரவையின் அவைத் தலைவர் பதவிக்கு அப்பாவு மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு கு. பிச்சாண்டியும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Updated On : 11 மே, 2021 at 9:56 AM
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு அப்பாவு மனுத்தாக்கல்
பகிர்:


சென்னை: தமிழக சட்டப்பேரவையின் அவைத் தலைவர் பதவிக்கு அப்பாவு மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு கு. பிச்சாண்டியும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், அவைத் தலைவர் பதவிக்கு ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏ அப்பாவு மனு தாக்கல் செய்தார். இவர் அவைத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

துணை அவைத் தலைவர் பதவிக்கு கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ கு. பிச்சாண்டி மனுத்தாக்கல்  செய்துள்ளார்.

Advertisement

இன்று காலை சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், சட்டப்பேரவை செயலாளரிடம் இருவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.