தமிழ்நாடு

இவ்வளவுக்குப் பிறகும் சுட்டுரையில் நீக்கப்படாத குஜராத் வெள்ளப் பாதிப்பு புகைப்படம்

DIN


தமிழக பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, விடியல் ஆட்சியில் ஒரே நாள் மழையில் நீச்சல்குளம் ஆன சென்னை என்று கருத்துக் கூறியிருந்தார்.

ஆனால், அந்த புகைப்படமோ, 2017ஆம் ஆண்டு குஜராத்தில் நேரிட்ட வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். அதனை தவறுதலாக எஸ்.ஆர். சேகர் தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்திருந்தது, நெட்டிசன்களால் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையான விமரிசனத்துக்கு உள்ளானார்.

சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை பெரும் பாதிப்புக்குள்ளானது. பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும், வீடுகளிலும் மழை நீர் புகுந்துள்ளன. அது உண்மைதான்.

ஆனால், எஸ்.ஆர். சேகர் தனது சுட்டுரைப் பக்கத்தில், இணைத்திருந்த புகைப்படம் 2017 குஜராத் வெள்ள பாதிப்பில் எடுக்கப்பட்டது. இது அறிந்ததும், திமுகவினரும், சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்களும், கடுமையான விமரிசனங்களை முன் வைத்து, அதனை ரீவீட் மற்றும் டேக் செய்ய ஆரம்பித்தனர். விமரிசனங்கள் முற்றுப்பெறாமல் நீண்டு கொண்டேச் சென்றது. நவம்பர் 7ஆம் தேதி இரவு 8 மணியளவில் போடப்பட்ட பதிவு நவம்பர் 10ஆம் தேதி காலை வரை எஸ்.ஆர். சேகர் பக்கத்தில் இன்னும் நீக்கப்படாமலே உள்ளது. தவறான புகைப்படம் என்று சுட்டிக்காட்டிய பிறகும் பாஜகவினர் அதனை நீக்காமலேயே இருப்பது சரியல்ல என்று திமுகவினர் கூறுகிறார்கள். ஒரு பக்கம் திமுகவினர் இந்த பதிவுக்கு எதிர்ப்புகளை தெரிவித்த போதும், சில பாஜகவினர், இன்னமும் அதனை ரீவீட் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT