தமிழ்நாடு

கம்பத்தில் தடையை மீறி நடைபயணம்: போலீஸ் குவிப்பால் போக்குவரத்து நெரிசல்

DIN

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து பசும்பொன்னுக்கு தடையை மீறி நடைபயணம் காரணமாக, போலீஸ் குவிக்கப்பட்டதால் வெள்ளிக்கிழமை பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் பசும்பொன் பிரிவு சார்பில் தேவர் குருபூஜைக்கு வெள்ளிக்கிழமை கம்பத்திலிருந்து பசும்பொன்னுக்கு நடைபயணமாக செல்வதாக கட்சியினர் அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். 

இதனைத்தொடர்ந்து தடையை மீறி நடைபயணம் செல்ல உள்ளதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் அறிவித்தனர். 

இந்த நிலையில் கம்பம் வடக்கு தெற்கு காவல் ஆய்வாளர்கள் புவனேஸ்வரி லாவண்யா தலைமையில் போலீசார் 50க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.

காலை நேரத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் கம்பம் தேனி பிரதான சாலையில்  பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT